சிவகங்கையில் அதிமுக தேர்தல் அலுவலக திறப்பு நிகழ்ச்சியில் பேசினார் அமைச்சர் ஜி.பாஸ்கரன். அருகில் வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதன். 
தமிழகம்

ஜெயலலிதா இல்லாததால் சிக்கலான தேர்தல்தான்: அமைச்சர் ஜி.பாஸ்கரன் பேச்சு

செய்திப்பிரிவு

‘‘நமக்கு சிக்கலான தேர்தல் என்பதால் வெற்றி பெற்றே ஆக வேண்டும்,’’ என கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் அமைச்சர் ஜி.பாஸ்கரன் பேசியதாவது: எதிரியை சரியாக எடைபோட்டு வீழ்த்த வேண்டும். ஏனென்றால் அவர் (இந்திய கம்யூ னிஸ்ட் வேட்பாளர் குணசேகரன்) ஏற்கெனவே 10 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்துள்ளார்.

நமது வேட்பாளர் வெளியூர் என்ற ஆயுதத்தை அவர்கள் கையில் எடுப்பார்கள். ஆனால் அவர் சிவகங்கை தொகுதி எம்பியாக இருந்துள்ளார். அதனால் அவரை வெளியூர் என்று சொல்ல முடியாது. நம்பிக்கை, நாணயம் மிக்கவர். தேர்தல் நேரத்தில் நிர்வாகிகள் தூங்கிவிடக் கூடாது. ஈகோ பார்க்கக் கூடாது. ஜெயலலிதா இல்லாத தேர்தல் என்பதால் கவனமாகச் செயல்பட வேண்டும். இந்த தேர்தல் நமக்கு சிக்கலானது.

இதில் நாம் வெற்றி பெற்றால், எப்போதும் நமது வெற்றியைத் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT