சிவகங்கை பேருந்து நிலையம் அருகேயுள்ள பெட்ரோல் பங்கில் விபத்தை ஏற்படுத்திய அதிமுக பிரச்சார வாகனம். 
தமிழகம்

சிவகங்கையில் தாறுமாறாக ஓடியது அதிமுக பிரச்சார வாகனம் மோதி 2 பேர் காயம்

செய்திப்பிரிவு

சிவகங்கை பெட்ரோல் பங்கில் அதிமுக பிரச்சார வாகனம் தாறுமாறாக ஓடியதில் இருவர் காயமடைந்தனர்.

சிவகங்கை தொகுதியில் அதிமுகவினர் வாகனம் மூலம் அரசின் திட்டங்களைப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதிமுக பிரச்சார வாகனத்துக்கு பையூரைச் சேர்ந்த ஓட்டுநர் பாஸ்கரன், சிவகங்கை பேருந்து நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் நேற்று முன்தினம் இரவு டீசல் நிரப்பினார்.

பின்னர் வாகனத்தை எடுத்த போது தாறுமாறாக ஓடி அருகில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கலசாங்குடியைச் சேர்ந்த லட்சுமணன்(45), சிவகங்கை மேலத்தெருவைச்சேர்ந்த வைரமணி ஆகியோர் மீது மோதியதில், அவர்கள் காயம் அடைந்தனர். இவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.

ஓட்டுநர் பாஸ்கரனிடம் வட்டாட்சியர் மைலாவதி தலை மையிலான அதிகாரிகள், போலீ ஸார் விசாரணை நடத்தினர்.

SCROLL FOR NEXT