சட்டப்பேரவை தேர்தலில், வேலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திகேயன் வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கணேஷிடம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். படம்: வி.எம்.மணிநாதன். 
தமிழகம்

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்: அரசியல் கட்சியினர் விறுவிறுப்பு

செய்திப்பிரிவு

வேலூரில் திமுக வேட்பாளரும், கே.வி.குப்பத்தில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளரும் நேற்று தனது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம் (தனி), கே.வி.குப்பம் (தனி) என மொத்தம் 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கடந்த 12-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளில் முக்கிய அரசியல் கட்சியினர் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முன்வரவில்லை.

கடந்த 13 மற்றும் 14-ம் தேதி விடுமுறை என்பதால், மார்ச் 15-ம் தேதி அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். வேலூர் மாவட்டத்தில் வேலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் உட்பட 4 பேர் இதுவரை மனு தாக்கல் செய்துள்ளனர்.

காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் உட்பட 4 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். அணைக்கட்டு தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் உட்பட 3 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். கே.வி.குப்பம் மற்றும் குடியாத்தம் (தனி) தொகுதிகளில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் என 6 பேர் இதுவரை மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், வேட்புமனு தாக்கல் 4-ம் நாளான நேற்று திமுக, அமமுக, நாம் தமிழர் கட்சியினர் தங்களது வேட்புமனுக்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நேற்று தாக்கல் செய்தனர்.

வேலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்தி கேயன் வேலூர் மாநகர திமுக அலுவலகத்தில் இருந்து ஊர்வல மாக வந்து வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கணேஷிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அதேபோல, நாம் தமிழர் கட்சி சார்பில் வேலூர் தொகுதி யில் போட்டியிட உள்ள பூங் குன்றன் வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கணேஷிடம் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

கே.வி.குப்பம் (தனி) தொகுதி யில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தி தேர்தல் நடத்தும் அலுவலர் பானுவிடம் தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். இதேபோல, வேலூர் மாவட்டத்தில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட உள்ள சுயேட்சை வேட்பாளர்களும் நேற்று தங்களது வேட்புமனுக்களை அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்ய நாளை வெள்ளிக்கிழமை (19-ம் தேதி) கடைசி நாள் என்பதால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

SCROLL FOR NEXT