பாலாற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால் காஞ்சிபுரம் மாவட் டத்தில் உள்ள 20 கிராம மக்கள் பாதுகாப்பான இடங்க ளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
மழையின் தீவிரத்தால் காஞ்சி புரம் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி உபரிநீர் வெளி யேறி வருகிறது. பாலாறு மற்றும் அதன் கிளை நதிகளான வேகவதி, கிளியாறு, ஓங்கூர் ஆறு, செய்யாறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், குறைந்த காற்ற ழுத்த தாழ்வுநிலை காரணமாக ஆந்திர மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதனால், பாலாற்றுக்கு நீர்வரத்து அதி கரித்து தமிழகம் நோக்கி வெள்ளம் கரைபுரண்டு வந்து கொண் டிருக்கிறது. வேலூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியில் தமிழக எல்லையில் நுழையும் பாலாறு 222 கிமீ பயணித்து காஞ்சிபுரம் மாவட்டம், புதுப்பட்டினம் அருகே வயலூர் கிராமப்பகுதியில் கடலில் கலக்கிறது.
தற்போது பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தடுப்பணை கள் வேகமாக நிரம்பி வரு கின்றன. இதன்காரணமாக, காவேரிப்பாக்கம் தடுப்பணையில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றின் கரையில் உள்ள பெரும்பாக்கம், முசரவாக்கம், விஷார், செவிலி மேடு, தேனம்பாக்கம், விப்பேடு, வாலாஜாபாத், வில்லிவாக்கம், புளியம்பாக்கம், வெள்ளப்பாக்கம், அவளூர், களக்காட்டூர், ஆத்தூர், பாலூர், கீழ்பேரமனல்லூர், வளத் தோட்டம் உள்பட 20 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங் களுக்கு செல்லுமாறு ஆட்டோக் களில் ஒலிபெருக்கி மூலம் வரு வாய்த்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். பாலாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டால் பெரும் பாக்கம், விஷார், செவிலிமேடு, களக்காட்டூர், வளத்தோட்டம், தேனம்பாக்கம், ஆசூர், கீழ்பேர மனல்லூர், அவளூர், வில்லி வலம், வல்லப்பாக்கம், புளியம் பாக்கம் ஆகிய 12 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில், பாலாற்றிலிருந்து கால்வாய் கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஏரிகளில் அவளூர் ஏரி நிரம்பி கரைகள் உடைந்தும் மற்ற சில ஏரிகளில் உபரி நீரை வெளியேற்றியும் வருகிறது.
இந்த நிலையில், இந்த ஏரி களுக்கு பாலாற்று வெள்ளம் சென்றால் சுமார் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 63 ஆயிரம் மக்கள் பாதிக்கப் படுவார்கள். ஏற்கெனவே, மதுராந்தகம் ஏரி நிரம்பி கிளியாற் றில் 21 ஆயிரம் கனஅடியில் உபரி நீர் வெளியேறி ஈசூர் அருகே பாலாற்றில் கலந்து வரு கிறது. இதனால், ஈசூர் பகுதி யிலிருந்து வயலூர் வரை வெள் ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாலாற்றில் வெள் ளப்பெருக்கு ஏற்பட்டால் கிளியாற் றின் தண்ணீரும் சேர்ந்து, கரை யோரங்களில் உள்ள 20 கிராமங்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னேற்பாடுகள் தயார்
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்டம் ஆட்சியர் இரா.கஜலட்சுமி கூறியதாவது: காவேரிப்பாக்கம் தடுப்பணை திறக்கப்பட்டுள்ளதால், பாலாற்றின் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள 20 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப் பட்டுள்ளது. இவர்கள் பாதுகாப்பாக தங்கும் வகையில், பள்ளி கட்டிடங்கள் மற்றும் திருமண மண்டபங்கள், சமுதாயகூடங்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், தேவையான அடிப்படை வசதிகள் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
இதனிடையே இரும்புலிச்சேரி தரைப்பாலம் ஆற்றில் இறங்கி சேதமடைந்ததால் போக்குவரத்து தடைபட்டது. இதனால் 5 ஆயிரம் மக்கள் தீவில் சிக்கியது போல முடங்கியுள்ளனர். இதுகுறித்து செங்கல்பட்டு கோட்டாட்சியர் பன் னீர்செல்வத்திடம் கேட்டபோது, ‘கிளியாற்று வெள்ளப் பெருக் கினால் இரும்புலிச்சேரி பாலத்தின் அருகே, போக்குவரத்துக்காக தற்காலிகமாக மண் பாதை அமைத்து வந்தோம். தற்போது பாலாற்றில் வெள்ள எச்சரிக்கை காரணமாக அப்பணி நிறுத்தப் பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடு களை தீவிரப்படுத்தியுள்ளோம்’ என்றார்.
ஆபத்து இல்லை
பாலாறு கீழ் வடிநில கோட்ட செயற்பொறியாளர் சுப்பையா கூறியதாவது:
காவேரிப்பாக்கம் பாலாற்று தடுப்பணையிலிருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. எனினும், பாலாற்றில் ஏற்கெனவே 75 ஆயிரம் கனஅடி அளவில் தண்ணீர் சென்றுள்ளதால், பெரிய ளவில் பாதிப்பு இருக்காது. 1.2 லட்சம் கனஅடி அளவில் தண் ணீர் சென்றால் மட்டுமே பாதிப்பு ஏற்படும். அதனால், பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவை யில்லை. எனினும், தேவையான முன்னெற்பாடுகளை வருவாய்த் துறையினருடன் இணைந்து மேற் கொண்டு வருகிறோம் என்றார்.
கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு
வெள்ள பாதிப்பு குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிவிப்பதற்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 24 மணி நேரம் செயல்படக் கூடிய கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் 044-27237207, 27237107 ஆகிய தொலைபேசி எண்களில் குறைகளை தெரிவிக்கலாம்.
இதுதவிர, தாம்பரம் நகராட்சி அலுவலகத்தில் கூடுதலாக ஒரு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தாம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 9445051077, 7299435270, 7401764105 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
மதுராந்தகம் ஏரியில் 21 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறப்பு
மதுராந்தகம் பெரிய ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் உபரிநீர் வெளியேறி வருகிறது. நீரின் வரத்து அதிகரித்ததால் படிப்படியாக உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு நேற்று முன்தினம் 18 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இந்த அளவை மேலும் அதிகரித்து 21 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் கிளியாற்றில் தற்போது 5 அடி உயரத்துக்கு தண்ணீர் செல்வதால் கரையோரப்பகுதியில் வசிக்கும் 13 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏரிக்கு 20 ஆயிரம் கனஅடியில் நீர் வந்துக்கொண்டிருக்கிறது என பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.