கரூர் தொகுதி தேமுதிக வேட்பாளருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவருக்கு பதில் வேறொரு வேட்பாளரை அறிவித்து விஜயகாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக, அமமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் கரூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிவிப்பு:
“நடைபெறவிருக்கும் 2021 சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் தேமுதிகவின் சார்பில் கரூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ரவி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக கஸ்தூரி தங்கராஜ், (மாவட்டப் பொருளாளர்) நியமிக்கப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவருக்கு தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும், அமமுக கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் மற்றும் கூட்டணிக் கட்சியைச் சார்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும், தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபட்டு பொதுமக்களின் பேராதரவைத் திரட்டி வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்”.
இவ்வாறு விஜயகாந்த் அறிவித்துள்ளார்.