தமிழகம்

ராஜ கண்ணப்பன், மாவட்ட பொறுப்பாளர் இடையே பிரச்சினையால் தேர்தல் வெற்றி பாதிக்குமா? - ராமநாதபுரம் திமுகவினர் கவலை

கி.தனபாலன்

முதுகுளத்தூர் திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் ராஜ கண் ணப்பனுக்கும், ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளர் முத்துராமலிங்கத்துக்கும் இடை யே உரசல் ஏற்பட்டதால் ஒரு வருக்கொருவர் சந்திக்காமல் சென் றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியின் திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று மதுரையிலிருந்து அருப் புக்கோட்டை வழியாக கமுதிக்கு வந்து கொண்டிருந்தார். அவரை வரவேற்க திமுக மாவட்டப் பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் க.விலக்கில் காத்தி ருந்தனர்.

ராஜ கண்ணப்பன் வரத் தாமதமானதால், காதர்பாட்சா முத்து ராமலிங்கம் தான் ராமநாதபுரத்துக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு செல்ல வேண்டும். எனவே, விரைந்து வருமாறு கண்ணப்பனை கேட்டுக் கொண்டுள்ளார். அதனை யடுத்து க.விலக்கில் இருந்து புறப்பட்டு மேலராமநதியில் உள்ள தனது தந்தை காதர்பாட்சா வெள்ளைச்சாமியின் நினைவிடத் துக்குச் சென்று காதர்பாட்சா முத்துராமலிங்கம் தனது ஆதர வாளர்களுடன் காத்திருந்தார். அங்கு கண்ணப்பனை வருமாறு மொபைல்போனில் தொடர்பு கொண்டு அழைத்துள்ளார்.

ஆனால், கண்ணப்பன் மற்றும் அவருடன் இருந்த மற்ற திமுக நிர்வாகிகள் சிலர் முதலில் பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்துக்குத்தான் செல்ல வேண்டும் என்று கூறி, அங்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.

தனது தந்தையின் நினை விடத்துக்கு அஞ்சலி செலுத்த வராமல் ராஜகண்ணப்பன் சென்றுவிட்டதால் ஏமாற்றமடைந்த காதர்பாட்சா முத்துராமலிங்கம், கட்சி நிர்வாகிகளுடன் பசும்பொன் தேவர் நினைவிடத்துக்குச் செல் லாமல் நேராக ராமநாதபுரம் புறப் பட்டுச் சென்றுவிட்டார்.

அதேநேரம், தன்னுடன் திமுக முக்கிய நிர்வாகிகள் இல்லாமல், பசும்பொன் தேவர் நினைவிடத்தில் ராஜகண்ணப்பன் அஞ்சலி செலுத்தினார். அதன் பின் கமுதி மற்றும் அருகிலுள்ள கிராமங்களிலுள்ள முக்கியத் தலைவர்களின் சிலைகளுக்கு ராஜ கண்ணப்பன் மாலை அணிவித்தார். அப்போது கண்ணப்பனுடன் திமுக முன்னாள் எம்எல்ஏ முருகவேல், முன்னாள் மாவட்டச் செயலாளர் சுப.த.திவாகரன், முன்னாள் மாவட்ட இளைஞரணி நிர்வாகி பெருநாழி போஸ் உள்ளிட்ட சிலர் மட்டுமே உடன் இருந்தனர்.

இந்தச் சம்பவத்தால் ராஜ கண்ணப்பனுக்கும், காதர்பாட்சா முத்துராமலிங்கத்துக்கும் இடையே தொடக்கத்திலேயே உரசல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தேர்தல் பணி பாதிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறி திமுகவினர் கலக்கம் அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT