அரசியல் வாரிசாக மக்கள் என்னைப் பார்த்தால் நிச்சயம் நிராகரித்துவிடுவார்கள். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி மக்கள் அதனை முடிவு செய்யட்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
பின்னர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ''எல்லோரும் வெற்றி வாய்ப்பை நினைத்துதான் களத்தில் இறங்குவார்கள். நானும் அவ்வாறே நினைத்து களத்தில் இறங்கி இருக்கிறேன். மக்கள் நல்ல வரவேற்பு தருகிறார்கள். வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
மக்கள் என்னை அரசியல் வாரிசாக நினைத்தால் நிச்சயம் நிராகரித்துவிடுவார்கள். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி மக்கள் அதனை முடிவு செய்யட்டும்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அதிமுக சட்டப்பேரவையில் ஆதரவு அளித்தது ஏன்” என்று கேள்வி எழுப்பினார்.