குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக எங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி. ரவி தெரிவித்துள்ளார்.
அதிமுக தேர்தல் அறிக்கை ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவியிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு சி.டி.ரவி பதிலளிக்கும்போது, “நாங்கள் இது தொடர்பாக அதிமுகவிடம் கலந்தலோசிப்போம்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மீதான எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்தக் கேள்விக்கு இடமே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடியில் வேட்புமனுத் தாக்கல் செய்த முதல்வர் பழனிசாமியிடம் கேட்டபோது, “நாங்கள் முன்னர் கூறியபடி குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற நிச்சயம் வலியுறுத்துவோம். வலியுறுத்தப்படும் என்றுதான் தெரிவித்துள்ளோம். சிறுபான்மையினரைப் பாதுக்காக்கக் கூடிய அரசு அம்மாவின் அரசு. அதன் வழியிலே சிறுபான்மை மக்களின் கோரிக்கையை நாங்கள் மத்தியில் வலியுறுத்துவோம்” என்றார்.