தமிழகம்

கோவில்பட்டி தொகுதியில் டி.டி.வி.தினகரன் வேட்புமனுத் தாக்கல்

எஸ்.கோமதி விநாயகம்

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக சார்பில் அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று இரவு கோவில்பட்டிக்கு அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வந்தார். அவருக்கு அமமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார்.

இன்று மதியம் 1.40 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்ய கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தார்.தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரநாராயணனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

உடன் கட்சியின் தேர்தல் பிரிவுச் செயலாளர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT