தமிழகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வளிமண்டலத்தில் காற்று சுழற்சி ஏதும் இல்லை. அதனால் வரும் 18-ம் தேதி வரை 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் தெளிவாக காணப்படும். 14-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலத்தில் 100 டிகிரி, கரூர் பரமத்தியில் 99 டிகிரி, மதுரை, பாளையங்கோட்டையில் 98 டிகிரி, தருமபுரியில் 97 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. இத்தகவலை சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று தெரிவித்தார்.