பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு,பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு அதிமுக சார்பில் டி.ஜான்தங்கம் என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் அக்கட்சியின் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். மேலும், கடலூர் மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு வேட்பாளராக இராம.பழனிசாமி என்பவர் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்குப் பதிலாக, கடலூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்வி இராமஜெயம் நிறுத்தப்பட்டுள்ளார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.