தமிழகம்

மழைக் கால பாதுகாப்பு கருதி 200 மின் பெட்டிகள் புதுப்பிப்பு

செய்திப்பிரிவு

சென்னை மாநகரப் பகுதியில் மழைக் காலத்தில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பழுதான 200 மின் பகிர்மான பெட்டிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகராட்சி மின்துறையில் 6,038 மின் பகிர்மான பெட்டிகள் உள்ளன. இவற்றில் தானியங்கி சுவிட்ச் பொருத்தப்பட்டு தினமும் 2 லட்சத்து 48 ஆயிரம் தெரு மின் விளக்குகள் இயங்கி வருகின்றன. மழைக் காலங்களில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பழுதான 200 பெட்டிகள் புதிதாக மாற்றப்பட்டுள்ளன.

மாநகராட்சிக்கு சொந்தமான மின் விளக்கு கம்பங்களில் முறைப்படுத்தப்படாத கேபிள் டிவி மற்றும் இன்டர்நெட் ஒயர்கள் கடந்த நிதியாண்டில் 410 கிலோ மீட்டர் நீளமும், இந்த ஆண்டு 400 கிலோ மீட்டர் நீளமும் அகற்றப்பட்டுள்ளது.

மேலும் 5 ஆயிரம் கிலோ மீட்டர் நீள ஒயர்கள் முறைப்படுத்தப் படாமல் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதுவரை சென்னையில் 4 ஆயிரம் கிலோ மீட்டர் நீள கேபிள் டிவி ஒயர்கள் முறைப்படுத்தப் பட்டுள்ளன.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT