ராமுத்தேவர் 
தமிழகம்

தபால் ஓட்டு படிவங்களை ஆளுங்கட்சியினர் விநியோகம்: திண்டுக்கல் அமமுக வேட்பாளர் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

தபால் ஓட்டு படிவங்களை அதிகாரிகள், ஆளுங்கட்சியினர் மூலம் விநியோகம் செய்வதாக திண்டுக்கல் தொகுதி அமமுக வேட்பாளர் ராமுத்தேவர் குற்றம் சாட்டினார்.

திண்டுக்கல்லில் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

திண்டுக்கல் தொகுதியில் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் இருந்தபோதும் மக்களின் தேவைகள்பூர்த்தி செய்யப்படவில்லை. திண்டுக்கல்நகர் மற்றும் கிராமப்பகுதிகளில் தரமான சாலைகள் அமைக்கவில்லை.வரும் தேர்தலில் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களில் அமமுக வெற்றிபெறும். 80 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குகள் செலுத்த தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.

இதற்கான படிவங்களை அதிகாரிகள் நேரடியாகக் கொண்டு சென்று கொடுக்காமல், ஆளுங்கட்சியான அதிமுகவினரிடம் தபால் வாக்குப்பதிவு படிவங்களை வழங்குகின்றனர். இதுகுறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT