தமிழகம்

வெள்ள நிவாரணம் கோரி விவசாய தொழிலாளர்கள் டிசம்பர் 8-ம் தேதி ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி டிசம்பர் 8-ம் தேதி கடலூர், விழுப்புரம், திருவள்ளுர், தூத்துக்குடி மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஏ.லாசர் எம்எல்ஏ தலைமை வகித்தார். பொதுச் செய லாளர் ஜி.மணி, பொருளாளர் வி.அமிர்தலிங்கம், நிர்வாகிகள் கே.பக்கிரிசாமி, எஸ்.சங்கர், பி.வசந்தாமணி, எஸ்.சந்திரன், தஞ்சை மாவட்டத் தலைவர் வாசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர் மழையால் கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள் ளூர், தூத்துக்குடி, சென்னை மாவட்டங்களில் 200-க்கும் மேற்பட் டோர் பலியாகியுள்ளனர். பல்லா யிரக்கணக்கான குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. ஆடு, மாடு களும் இறந்துள்ளன. வீடுகளை இழந்த ஏழை மக்கள் சுமார் 5 லட்சம் பேர் அரசின் முகாம்களின் உள்ளனர். மழையால் தமிழகத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ரூ.10 ஆயிரம் உதவித் தொகை

லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் வேலையிழந் துள்ளனர். அவர்களது தொகுப்பு வீடுகள் பெரிதும் சேதமடைந்துள் ளன. எனவே, மத்திய, மாநில அரசுகள், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் பாராபட்சமின்றி நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயத் தொழிலாளர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 ஆயி ரம் உதவித்தொகை, அரிசி, மண்ணெண்ணெய், பருப்பு உள் ளிட்ட அத்தியாவசியப் பொருட் களை வழங்க வேண்டும்.

வீடுகளை இழந்த அனைவருக் கும் தமிழக அரசு புதிய வீடு களை கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

மேலும், இந்தக் கோரிக்கை களை வலியுறுத்தி டிசம்பர் 8-ம் தேதி கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT