தமிழகம்

சிலை கடத்தல் வழக்கில் சுபாஷ் சந்திர கபூருக்கு காவல் நீட்டிப்பு

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டத்தில் நடைபெற்று வரும் சிலை கடத்தல் வழக்கில் சுபாஷ் சந்திர கபூருக்கு(63) காவல் நீட்டிப்பு செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரியலூர் மாவட்டம் சுத்த மல்லி, ஸ்ரீபுரந்தான் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பழமையான கோயில்களில் இருந்த சிலைகள் தொடர்ந்து திருடுபோயின. மேலும், கைவினைப் பொருட்கள் என்ற பெயரில், விலைமதிப்புமிக்க சிலை கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட் டன. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியதில், பஞ்சாப்பை சேர்ந்த, அமெரிக்க வாழ் இந்தியரான சுபாஷ் சந்திர கபூருக்கு, சிலைகள் கடத்தல் வழக்கில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சர்வதேச போலீஸ் உதவியுடன் ஜெர்மனியில் கைது செய்யப்பட்ட சுபாஷ் சந்திர கபூர், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிலை கடத்தல் வழக்கு விசாரணைக்காக ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்துக்கு அவர் நேற்று பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முத்துமுருகன், வரும் 17-ம் தேதி வரை சுபாஷ் சந்திர கபூரின் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதனையடுத்து மீண்டும் அவர் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

SCROLL FOR NEXT