தமிழகம்

விசிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: வன்னி அரசு, ஆளூர் ஷாநவாஸ் போட்டி

செய்திப்பிரிவு

திமுக கூட்டணியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வன்னி அரசு, ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை திமுக மெகா கூட்டணி அமைத்து எதிர்கொள்கிறது. திமுகவில் காங்கிரஸ், மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், மமக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, கொமதேக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன

இதில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

விசிக உதய சூரியன் சின்னத்தில் 3 தொகுதிகளிலும், தனி சின்னத்தில் மூன்று தொகுதிகளிலும் நிற்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 6 தொகுதிகளிலும் தனிச் சின்னத்தில் நிற்பதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதில் 4 தனித் தொகுதிகளும், 2 பொதுத்தொகுதிகளும் அடங்கும்.

இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன், தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

அதன்படி,

நாகப்பட்டினம்- ஆளூர் ஷாநவாஸ்

திருப்போரூர்- எஸ்.எஸ்.பாலாஜி

வானூர் (தனி) - வன்னி அரசு

அரக்கோணம் (தனி)- கவுதம சன்னா

காட்டுமன்னார்கோயில் (தனி)- சிந்தனைச் செல்வன்

செய்யூர் (தனி) - பனையூர் பாபு

ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

SCROLL FOR NEXT