தமிழகம்

மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரமிது: கரோனா வைரஸ் பரவலால் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிவுரை

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவலை தடுக்க அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிவுறுத்தியுள்ளார்.

மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட 6 மாநிலங்களில் தினசரி கரோனா தொற்று அதிகமாக உள்ளது. மகாராஷ் டிராவில் நேற்று முன்தினம் 15,817 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. கேரளாவில் 1,780 பேர், பஞ்சாபில் 1,408 பேர், கர்நாடகா வில் 833 பேர், குஜராத்தில் 715 பேர், தமிழகத்தில் 670 பேர், மத்திய பிரதேசத்தில் 603 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த 7 மாநிலங்களில் கரோனா தொற்று ஏறுமுகமாக உள்ளது.

மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் நாடு முழுவதும் 24,882 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது.

வைரஸ் பரவலை தடுக்க மகாராஷ் டிராவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன. சில மாவட்டங்களில் முழுநேர ஊரடங்கும், வேறு சில பகுதிகளில் இரவு நேர ஊரடங்கும் அமல் செய்யப்பட்டுள்ளது. பஞ்சாபில் மொகாலி உள்ளிட்ட நகரங்களில் இரவு நேர ஊரடங்கு பின்பற்றப்படுகிறது.

மத்திய பிரதேசத்தில் தலைநகர் போபால், இந்தூரில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் இரு நகரங் களிலும் இரவுநேர ஊரடங்கை அமல் படுத்துவது குறித்து மாநில அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

இந்த பின்னணியில் மத்திய சுகா தாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியதாவது:

உலக அளவில் கரோனா உயி ரிழப்பு இந்தியாவில் குறைவாக உள்ளது. உள்நாட்டில் கரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன. நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்துள்ளது.

எனினும் மக்களின் அலட்சியத்தால் 6 மாநிலங்களில் வைரஸ் பரவல் அதி கரித்து வருகிறது. இது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம். வைரஸ் பர வலை தடுக்க அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடை வெளியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

150 நாடுகளுக்கு உதவி: பியூஷ் கோயல் பெருமிதம்

திருப்பதி: ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு, சுமார் 150 நாடுகளுக்கு கரோனா தடுப்பு மருந்துகளை வழங்கி உதவி செய்துள்ளது. நம்மை நாம் பாதுகாத்துக்கொள்வதுடன், உலக நாடுகளின் நலன் பற்றியும் கருத்தில் கொள்பவர்கள் இந்தியர்கள். இதுதான் 130 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவின் உண்மையான பலம். கரோனா வைரஸ் பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே, முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் வரை நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் படிப்படியாக தளர்த்தப்பட்டதையடுத்து, இந்திய பொருளாதாரம் மீண்டு வருகிறது. 80 சதவீத பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சரக்கு போக்குவரத்தும் சீரடைந்து வருகிறது. திருப்பதி ரயில் நிலையத்தில் நடைபெறும் விரிவாக்கப் பணி முடியும் தருவாயில் உள்ளது. இப்பணி முடிந்ததும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ரயில்கள் சிரமமின்றி வந்து செல்லும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT