மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் இருந்து தமிழ்நாடு இளைஞர் கட்சி வெளியேறியுள்ளது.
மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் இணைந்த தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு முதல் கட்டமாக செங்கல்பட்டு, வேப்பனஹள்ளி, காட்பாடி, திருவாரூர் ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில், அதிருப்தி காரணமாக கூட்டணியில் இருந்து தமிழ்நாடு இளைஞர் கட்சி வெளியேறியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராஜசேகர் கூறும்போது, ‘‘நல்லவர்கள் கூடாரம் குழப்பவாதிகள் கூடாரம் ஆகிறது என்ற நெருடலும், இளைஞர்களின் நம்பிக்கையை அங்குஅடகுவைக்க தேவையில்லை என்பதாலும் மக்கள் நீதி மய்யம்உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறுகிறோம்’’ என்றார்.
கூட்டணியில் இருந்து தமிழ்நாடுஇளைஞர் கட்சி வெளியேறியதால், அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தவேண்டிய நிலை மக்கள் நீதி மய்யத்துக்கு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அணியில் இணைந்து பயணிக்க தமிழ்நாடு இளைஞர் கட்சி நிர்வாகிகள் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.