விழுப்புரத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில், குறைந்தபட்சம் ஜனநாயகத்தை காக்க அதிகபட்ச சர்வாதிகாரம் தேவை என்று சீமான் தெரிவித்தார்.
விழுப்புரம் தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் செல் வத்தை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விழுப்புரத்தில் நேற்று மாலை பேசியது:
திமுகவும், அதிமுகவும் மக் களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. எத்தனையோ தேர்தலை சந்தித்தும் மாறுதல் ஏற்பட வில்லை. தொலைநோக்கு திட்டம்இல்லாததால் நம் சமூகம் முன் னேறாமல் உள்ளது. இந்திய அளவில் அதிக இளைஞர்களை கொண்ட இயக்கம் நாம் தமிழர் கட்சிதான். காவல்துறையினருக்கு விடுமுறை அளிக்காததால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படு கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால்காவலர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். கல்வியை மேம்படுத்து வோம். அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும்.
காவலர்கள் யார் என்றே தெரியாத அளவுக்கு மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றினால் குற்றங்கள் குறையும். சிங்கப்பூரில் போக்குவரத்து விதிமீறல்களில் 12 முறை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதன் பின் கடுமையான தண்டனை அளிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் ஜனநாயகத்தை காக்க அதிகபட்ச சர்வாதிகாரம் தேவைப்படுகிறது.
கேரளாவில் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டதால் தற்போது அரசுப்பள்ளிக்கு 30 சதவீத மக்கள் திரும்பியுள்ளனர். கரோனாகாலத்தில் சிறப்பாக உயிரை பணயம் வைத்து போராடிய மருத்துவர்கள் ஊதிய உயர்வு கேட்டுபோராடியபோது அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி மட்டுமே துணையாக நின்றது. ஒருமுறை எங்களுக்கு வாய்ப்பளித்தால் கனவிலும் எங்களை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாது என்றார். இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி, திண்டிவனம், செஞ்சி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
எத்தனையோ தேர்தலை சந்தித்தும் மாறுதல் ஏற்பட வில்லை. தொலைநோக்கு திட்டம் இல்லாததால் முன்னேறவில்லை.