கோப்புப்பட்டம் 
தமிழகம்

அதிமுக, திமுக மீது மக்களுக்கு அதிருப்தி உள்ளது: அமமுக வேட்பாளர்கள் பேட்டி

செய்திப்பிரிவு

அதிமுக, திமுக மீது மக்களிடம் அதிருப்தி இருக்கிறது. இவர்களுக்கு மாற்று சக்தியாக அமமுகவை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று அமமுகவின் விழுப்புரம் தொகுதி வேட்பாளர் பாலசுந்தரம், விக்கிரவாண்டி தொகுதி வேட் பாளர் அய்யனார் ஆகியோர் தெரிவித்தனர்.

இதுகுறித்து இருவரும் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

ஜெயலலிதா இல்லாத நேரத் தில் நடைபெறுகிற முக்கியமான தேர்தல். தொண்டர்கள் யார் பின்னால் நிற்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் தேர்தலாகும். அதிமு கவையும், ஆட்சியையும் டிடிவி.தினகரன் தலைமையிலான அமமுக மீட்டெடுக்கும். ஜெயலலி தாவின் உண்மையான ஆட்சி அமையும். திமுகவில் எப்படி வாரிசு அரசியல் இருக்கிறதோ அதுபோன்று தான் அதிமுகவிலும் இருக்கிறது.

ஜெயலலிதாவின் உண்மை யான தொண்டர்கள் எங்களிடம் தான் இருக்கிறார்கள். பொய்யானவாக்குறுதி பொய்யான கூட்ட ணியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வீட்டிற்கு ஒருவ ருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று எங்கள் தேர்தல்வாக்குறுதியில் குறிப்பிட்டிருக்கி றோம், அதை நாங்கள் மக்களிடம் எடுத்துக் கூறுவோம், மக்கள் எங்களை ஏற்றுக்கொள்வார்கள். அதுபோல் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்கள், நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பு ஆகியவை பற்றியும் எடுத்துக்கூறி பிரச்சாரம் செய்வோம்.

அதிமுக, திமுக மீது மக்களிடம் அதிருப்தி இருக்கிறது. இவர்களுக்கு மாற்று சக்தியாக அமமுகவை மக்கள் தேர்ந்து எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்ற தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT