தமிழகம்

தேர்தலுக்கு முன்னரே வெற்றி பெற்றுவிட்டார் சம்பத்!

ந.முருகவேல்

கடலூரில் அதிமுக சார்பில் போட்டி யிடும் அமைச்சர் சம்பத் தேர்தலுக்கு முன்னரே தனது சாணக்கியத்தனத்தால் வெற்றி பெற்று விட்டதாக மார்தட் டுகின்றனர் அவரது ஆதரவு ரத்தத்தின் ரத்தங்கள்.

‘தேர்தலுக்கு முன்னரே வெற்றியா!’ என்ற ஆச்சரியத்தோடு ரத்தத்தின் ரத்தங்களை அணுகினோம். “ஆமாங்க... அவரது அமைதியான செயல்பாடுகள் மூலம் கட்சிக்குள் தனக்கு எதிராக அரசியல் செய்து கொண்டிருந்தவர்களை வீழ்த்தி வெற்றிகண்டுள்ளார். அவரது முதல் குறி விருத்தாசலம். இத்தொகுதியில் ஏற்கெனவே உள்ள எம்எல்ஏ கலைச்செல்வனுக்கு கல்தா கொடுக்க முடிவு செய்து, அதை கூட்டணிக் கட்சிக்கு விட்டுக் கொடுக்க வைத்திருக்கிறார்.

அவரது அடுத்த குறி பண்ருட்டியில் சத்யா பன்னீர்செல்வம். பண்ருட்டித் தொகுதியை கூட்டணிக்கு தள்ளிவிட முயற்சி மேற்கொண்டபோதிலும் அதுகைகூடாத பட்சத்தில், பன்னீர் செல்வத்தின் குரு மூலமே சத்யா பன்னீர்செல்வத்திற்கு வாய்ப்பை தவிர்த்து, தனது போட்டியாக கருதப்படும் சொரத்தூராருக்கு பண்ருட்டியை தாரை வார்த்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் அமைதிப்படையாக வலம் வரும் சம்பத், சமார்த்தியமாக காய் நகர்த்துவதில் கைதேர்ந்தவர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். கட்சிக்குள் தனக்கான எதிர் தரப்பை இப்படி செய்திருப்பதை அவரது ஆதரவாளர்கள் தேர்தலுக்கு முந்தைய வெற்றியாக கருதுகின்றனர்.

SCROLL FOR NEXT