செஞ்சி தொகுதியில் திமுக சார்பில் கே எஸ் மஸ்தானும், பாமக சார்பில் எம்.பி.எஸ் ராஜேந்திரனும் போட்டியிடுகின்றனர்.
இருவரும் அவரவர் சார்ந்துள்ள கட்சிகளில் மோஸ்ட் சீனியர்தான். ஆனாலும் கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுவதாக திமுக, பாமக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து திமுக, பாமக நிர்வாகிகளிடம் கேட்டபோது, “சீனியர் என்பதால் அடுத்த நிலையில் உள்ள கட்சியினருகான முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை. சார்ந்துள்ள கட்சி வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணம் சக தோழமைக் கட்சியினருக்கு மேலோங்கியுள்ளது. ஆனாலும் இவர்களின் செயல்பாடுகளை ஜீரணிக்க முடியவில்லை” என்கின்றனர். அதே நேரம் கட்சி நிர்வாகிகளை சமரசப்படுத்தும் பணியை இரு வேட்பாளர்களும் தொடங்கியுள்ளனர்.
அதே நேரத்தில், இரு தரப்பிலும் இருந்து எதிர்தரப்பை தங்கள் வசம் இழுக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. அதன் மூலம், தேர்தல் பணிகளை தொய்வடையச் செய்ய முயல்வதாக இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொள்கின்றனர்.