எஸ்.கே.பொன்னுத்தாய் 
தமிழகம்

திருப்பரங்குன்றம் மார்க்சிஸ்ட் வேட்பாளர் பொன்னுத்தாய்: ஆட்டோ ஓட்டுநரின் மனைவிக்கு வாய்ப்பு

செய்திப்பிரிவு

திருப்பரங்குன்றம் தொகுதி மார்க் சிஸ்ட் வேட்பாளராக ஆட்டோ ஓட்டுநரின் மனைவியான எஸ்.கே.பொன்னுத்தாய் அறிவிக்கப் பட்டுள்ளார்.

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடும் ஆறு தொகுதி களின் வேட்பாளர்கள் பெயர் நேற்று அறிவிக்கப்பட்டது. இதன் படி திருப்பரங்குன்றம் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளராக எஸ்.கே. பொன்னுத்தாய்(46) அறிவிக்கப்பட் டுள்ளார். இவர் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராகவும், ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாள ராகவும் உள்ளார்.

இவரது கணவர் கருணாநிதி. இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர் பிளஸ் 2 படித்துள்ளார். இவரது மகன் ராகுல்ஜி, இந்திய மாணவர் சங்கத்தின் புறநகர் மாவட் டத் தலைவராக உள்ளார். இவருக்கு இலக்கியா என்ற மகளும் உள்ளார். பொன்னுத்தாய் குடும்பத்துடன் சமய நல்லூரில் வசித்து வருகிறார்.

மதுரை மேற்கு, மதுரை வடக்கு தொகுதியை ஒதுக்குமாறு திமுகவிடம் மார்க்சிஸ்ட் கட்சி கேட்டு வந்தது. இத்தொகுதிகள் கிடைக்காதபட்சத்தில் திருப்பரங்குன்றம் தொகுதியை ஒதுக்குமாறு திமுகவிடம் கேட்டு வந்தது. அதன்படி திருப்பரங்குன்றம் தொகுதியை திமுக ஒதுக்கியது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக மாவட்டக் குழு 3 பேர் கொண்ட பட்டியலை அனுப்பியது. அதாவது மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஆகிய 3 பேரை பரிந்துரை செய்தது. இதில் பொன் னுத்தாய் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இவர் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவை எதிர்த்து களம் காண்கிறார்.

SCROLL FOR NEXT