சக்திதேவி 
தமிழகம்

திண்டுக்கல் மாவட்டத்தின் மூன்று தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை களம் இறக்கிய நாம் தமிழர் கட்சி

செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள ஏழு தொகுதிகளில் மூன்றில் பெண் வேட்பாளர்களும், நான்கில் ஆண் வேட்பாளர்களும் நாம் தமிழர் கட்சி சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, ஆத்தூர், நத்தம், வேட சந்தூர் என ஏழு தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது போலவே இந்த தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இதனால் ஏழு தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதில் நத்தம் தொகுதியில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட பேராசிரியர் சிவசங்கரன் மீண்டும் போட்டியிடுகிறார். திண்டுக்கல் தொகுதியில் ஜெயசுந்தர், பழநி தொகுதியில் வினோத், ஆத்தூர் தொகுதியில் சைமன் ஜஸ்டின் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.

மீதமுள்ள மூன்று தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் நிலக்கோட்டை தொகுதியில் பொறியாளர் வசந்தாதேவி, ஒட்டன்சத்திரம் தொகுதியில் சக்திதேவி, வேடசந்தூர் தொகுதியில் போதுமணி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வேட்பாளர்கள் முறைப்படி அறிவிப் புக்கு முன்னரே இவர்கள் அனைவரும் தங்கள் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். நேற்று முன்தினம் இரவு சென்னையில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை அடுத்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்த உள்ளதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT