பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியார் சிலைக்கு கூண்டு அமைக்கப் பட்டுள்ளது. படம்: மு.லெட்சுமி அருண் 
தமிழகம்

அசம்பாவிதங்களை தவிர்க்க பெரியார் சிலைக்கு கூண்டு

செய்திப்பிரிவு

சட்டப்பேரவை தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் துணிகளால் மூடிவைக்கப்படுகின்றன.

திருநெல்வேலியில் அண்ணா,எம்.ஜி.ஆர். சிலைகள் மூடப்பட்டிருக்கின்றன. பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியார் சிலை மூடப்படவில்லை. இதுவரை நடைபெற்ற தேர்தல்களின்போதும் இச்சிலை மூடப்படவில்லை.

இந்நிலையில், இச் சிலையை மூடவேண்டும் என்று இந்து முன்னணியினர் கடந்த சில நாட்களுக்கு முன்கோரிக்கை விடுத்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆனால் பெரியார் பொதுவான தலைவர் என்பதால் சிலை மூடப்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பெரியார் சிலையைச் சுற்றி தற்போது இரும்பு கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT