கோவையில் நகைப்பறிப்பு சம்பவத்தின்போது பெண் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து குற்றவாளி களைப் பிடிக்க தனிப்படை போலீஸார் தமிழக - கேரள எல்லையோரப் பகுதிகளில் விசாரணை மேற்கொண் டுள்ளனர்.
கோவை மாவட்டம் காந்திபார்க் பகுதியைச் சேர்ந்த ஜோகப்பன் என்பவ ரது மனைவி மீனாட்சி(38). இவர் கடந்த 18-ம் தேதி இரவு, உடல்நிலை சரியில் லாமல் இருந்த தனது மகன் ராகுலை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுவிட்டு வீரகேரளம் வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தமிழ் நாடு வேளாண்மை பல் கலைக்கழகத்தின் நன்செய் பண்ணை அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே மற்றொரு இருசக் கர வாகனத்தில் வந்த இருவர் மீனாட்சி கழுத்தில் அணிந்திருந்த நகையைப் பறிக்க முயன்றனர். அதில் அவரது தலைமுடியும் சிக் கியதால் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளா னது. சாலையில் விழுந்த மீனாட்சி, படுகாயமடைந்து உயிரிழந்தார். விசாரணை யில், அவர் அணிந்திருந்தது கவரிங் நகை என்பது தெரியவந்தது.
இவ்வழக்கை கொலை வழக்காகப் பதிவு செய்து, 5 தனிப்படைகள் அமைத்து போலீஸார் விசாரணை யைத் தொடங்கியுள்ளனர். மீனாட்சியின் மகன் ராகுல் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
காவல்துறை உயர் அதி காரிகளிடம் கேட்டபோது, ‘சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக கோவை போத்த னூர் பகுதியில் பெண் ஒரு வரிடம் இருசக்கர வாகனத் தில் இருவர் வந்து 4.5 பவுன் நகையை பறித்துச் சென் றுள்ளனர். அவர்களுக்கு இந்த வழக்கில் தொடர் பிருக்கலாம் என சந்தே கித்து, சிலரைப் பிடித்து விசாரித்து வருகிறோம்.
இதுதவிர, ஒரு தனிப் படை தமிழக - கேரள எல்லை வரை விசாரணையை மேற் கொண்டுள்ளது. மற்றொரு குழு சம்பவம் நடைபெற்ற வடவள்ளி வட்டாரத்தில் விசாரிக்கிறது.
சம்பவம் நடைபெற்ற இடம் நகருக்கு வெளிப் புறத்தில் இருப்பதா லும், இரவு நேரம் என்பதா லும் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் நிலவுகிறது’ என்றனர்.