ஆதரவற்ற மகளிருக்கு அவர்களுடைய கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.6 அன்று நடைபெற உள்ளது. இதற்காக, அதிமுக, திமுக ஆகிய இரு முதன்மைக் கட்சிகளும் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றன. திமுக போட்டியிடும் 173 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நேற்று அறிவாலயத்தில் வெளியிட்டார். இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகியுள்ளது.
அதில் ,
* வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பங்களைச் சார்ந்த 1 லட்சம் கிராமப்புறப் பெண்களுக்குக் கால்நடைகள் வளர்ப்பு, மீன் பிடித்தல், வண்ண மீன் வளர்ப்பு, மண் பானைகள் செய்தல் போன்ற விவசாயம் சார்ந்த சிறிய தொழில்கள் மற்றும் வணிகம் செய்வதற்கு வட்டியில்லாக் கடனாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
* 35-வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத, ஆதரவற்ற மகளிர்க்கு அவர்களுடைய கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.