தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சில கடைகளில் மழை நீர் புகுந்ததால் வர்த்தகம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வர்த்தக பகுதியான தியாகராய நகரும் மழை வெள்ளத்தில் தப்பவில்லை. தியாகராய நகர் பேருந்து நிலையத்தின் உள்ளே முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
முக்கிய வர்த்தகப் பகுதியான ரங்கநாதன் தெருவிலும் மழைநீர் தேங்கியுள்ளது. அங்குள்ள சில கடைகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால், அந்தப் பகுதியில் வர்த்தகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கடை உரிமையாளர்கள் மோட்டார் பம்ப் களை வைத்து நீரை வெளியேற்றி வருகின்றனர்.
தி.நகர் மார்க்கெட், நடேசன் தெரு ஆகிய இடங்களில் தேங்கியுள்ள மழை நீரில் கழிவுநீரும் கலந்து துர்நாற்றம் வீசுகிறது.