தமிழகம்

குண்டர் சட்டத்தில் அட்டாக் பாண்டி கைது

செய்திப்பிரிவு

பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அட்டாக் பாண்டியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மதுரை காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

மதுரையைச் சேர்ந்த திமுக நிர்வாகி பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டி, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கெனவே அடிதடி, நிதி நிறுவன மோசடி, மிரட்டல் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் அடிப்படையில் இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மதுரை காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் நேற்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு பாளையங் கோட்டை சிறையில் அடைக்கப் பட்டுள்ள அட்டாக் பாண்டிக்கு வழங்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இந்நிலையில், அட்டாக் பாண்டி உட்பட 5 பேர் மீதான நிதி நிறுவன மோசடி வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

SCROLL FOR NEXT