‘‘மத்திய அரசுக்கு இணக்கமாக இருப்பவர்கள் வெற்றி பெற்றால் தான் தமிழகத்துக்கு மத்திய அரசு திட்டங்கள் கிடைக்கும்,’’ என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் பாஜகவிற்கு காரைக்குடி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வேட்பாளராக நிற்க வாய்ப்புள்ளது.
ஆனால் இதுவரை வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று காரைக்குடி வந்த ஹெச்.ராஜாவிற்கு பாஜக, அதிமுகவினர் சிறப்பாக வரவேற்ப்பு கொடுத்தனர்.
தொடர்ந்து அவர் பிரச்சாரத்தை தொடங்கி வாக்கு சேகரித்தார்.
அவர் பேசியதாவது: அதிமுக, பாஜக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும். மத்திய அரசுக்கு இணக்கமாக இருப்பவர்கள் வெற்றி பெற்றால் தான் மத்திய அரசு திட்டங்கள் கிடைக்கும்.
மேற்குவங்கம் மம்தா எதிர்ப்பதால் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய உதவித்தொகை கிடைக்கவில்லை. இதனால் அங்குள்ள 85 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார். பிரச்சாரத்திற்கு பிரதமர் மோடி தமிழகம் வருகிறார், என்று பேசினார்.