டிடிவி தினகரன்: கோப்புப்படம் 
தமிழகம்

புதுச்சேரியில் எஸ்டிபிஐக்கு நான்கு தொகுதிகளை ஒதுக்கியது அமமுக

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் எஸ்டிபிஐ-க்கு நான்கு தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாக அமமுக தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் (அமமுக), சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியா (எஸ்டிபிஐ) கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன.

இக்கட்சிகளுக்கிடையே இன்று (மார்ச் 12) ஏற்பட்ட ஒப்பந்தப்படி அமமுக தலைமையிலான கூட்டணியில் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு, அரியாங்குப்பம், காரைக்கால் வடக்கு, மாஹே ஆகிய நான்கு தொகுதிகள் எஸ்டிபிஐ-க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எஸ்டிபிஐ புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர் தமீம் கனி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT