புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக்கோட்டை(தனி) (உ.ஜெயபாரதி), விராலிமலை (அமைச்சர் சி.விஜயபாஸ்கர்), புதுக்கோட்டை (வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான்), திருமயம் (பி.கே.வைரமுத்து), ஆலங்குடி (தர்ம.தங்கவேல்), அறந்தாங்கி (மு.ராஜநாயகம்) ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுகவினரே போட்டியிடுகின்றனர்.
இதேபோன்று, விராலிமலை (எம்.பழனியப்பன்), புதுக்கோட்டை (மருத்துவர் வி.முத்துராஜா), திருமயம் (எஸ்.ரகுபதி எம்எல்ஏ ), ஆலங்குடி (சிவ.வீ.மெய்யநாதன் எம்எல்ஏ) ஆகிய தொகுதிகளில் திமுகவினர் போட்டியிடுகின்றனர்.
இதேபோன்று, திமுக கூட்டணியில் இருந்து கந்தர்வக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அறந்தாங்கியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகின்றன.
கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி ஆகிய தொகுதிகளில் அதிமுக சார்பில் 2 பேரும்,புதுக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் ஒருவர் என மொத்தம் 3 வேட்பாளர்கள் மட்டும் புதுமுகங்களாகும்.
மற்ற தொகுதிகளில், அதிமுகவில் எம்எல்ஏகள் 3 பேரில் ஒருவருக்கும், முன்னாள் எம்எல்ஏகள் 3 பேருக்கும், திமுகவில் எம்எல்ஏகள் 3 பேரில் இருவருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்களில் திமுகவில் இருந்து ஒருவர் (எம்.பழனியப்பன்) போட்டியிடுகிறார்.
இதேபோன்று, காங்கிரஸ் (அறந்தாங்கி-டி.ராமச்சந்திரன்) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (கந்தர்வக்கோட்டை -எம்.சின்னத்துரை) ஆகிய கட்சிகளில் கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்களையே மீண்டும் களம் இறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில் தன்னை எதிர்த்து கூட்டணி அமைத்து போட்டியிடும் அதிமுக, திமுக ஆகிய இரு பிரதான கட்சிகளைப் பொறுத்தவரை ஏற்கெனவே தேர்தல் களம் கண்ட அனுபவசாலிகள் அதிகமானோர் இத்தேர்தலில் களம் இறக்கியுள்ளதால் தேர்தல் களம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.