தமிழகம்

4 வருடங்களுக்கு ஒருமுறைதான் ஓபிஎஸ் தொகுதிக்கே செல்வார்; நிச்சயமாக 100 % வெற்றியை மக்கள் திமுக கூட்டணிக்கு அளிப்பார்கள்: தங்க தமிழ்செல்வன்

செய்திப்பிரிவு

4 வருடங்களுக்கு ஒருமுறைதான் ஓபிஎஸ் போடிநாயகனூர் தொகுதிக்கே செல்வார் என்று அத்தொகுதியின் திமுக வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ள தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பத்திரிகையாளரிடம் தங்க தமிழ்செல்வன் பேசும்போது, “ தலைவர் ஸ்டாலின் கூறியபடி எல்லா வேட்பாளருமே கலைஞர் வேட்பாளர்தான். சின்னம் உதய சூரியன்தான். நிச்சயமாக 100 சதவீதம் வெற்றியை மக்கள் திமுக கூட்டணிக்கு அளிப்பார்கள்.

போடி நாயக்கனூர் தொகுதியிலும் திமுக வெற்றி பெறும். எந்தத் தலைவரும் சிந்தித்து பார்க்காத திட்டத்தை ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தார். குடும்ப தலைவிக்கு மாதம், மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்குவதுதான் அது. இந்த ஒரு செய்திக்காகவே தமிழ் நாட்டு மக்கள் திமுகவை வெற்றியடை செய்வார்கள்

போடி நாயகக்கனூர் மக்கள் வெறுப்பு மன நிலையில்தான் உள்ளனர். மக்களுக்கும், தொகுதிக்கும் ஒபிஎஸ் இதுவரை நன்மை செய்ததாக தெரியவில்லை. 4 வருடங்களுக்கு ஒருமுறைதான் அவர் தொகுதிக்கே செல்வார்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்று (வெள்ளிக்கிழமை) போடி நாயகனூரில் வேட்மனு தாக்கல் செய்த ஓ. பன்னீர்செல்வம் மக்கள் எனக்கு அமோக ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன், தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT