நிலக்கோட்டை தொகுதியை காங்கிரசுக்குப் பெற்றுத்தராத மாநில காங்கிரஸ் தலைவரைக் கண்டித்து நிலக்கோட்டையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதி திமுக கூட்டணியில் மக்கள் விடுதலைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸுக்கு தொகுதி ஒதுக்கப்படும், இதில் முன்னாள் எம்எல்ஏ., பொன்னம்மாள் பேத்தி முன்னாள் மாநில மகளிர் காங்கிரஸ் தலைவி ஜான்சிராணி போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பில் காங்கிரஸார் இருந்தனர்.
இந்நிலையில் மக்கள் விடுதலைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், தொகுதியைப் பெற்றுத்தராத மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியைக் கண்டித்து நிலக்கோட்டையில் காங்கிரஸார் தொகுதி பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் அபிஷேக் அருண் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.