தமிழகம்

மக்கள் எனக்கு அமோக ஆதரவு தருவார்கள்; தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக மகத்தான வெற்றி பெறும் - ஓபிஎஸ்

செய்திப்பிரிவு

மக்கள் எனக்கு அமோக ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன், தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்று போடிநாயக்கனூரில் வேட்புமனுவை தாக்கல் செய்த ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

வேட்புமணு தாக்கல் செய்த பின் ஒபிஎஸ் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “அதிமுக சார்பாக வெற்றி வேட்பாளராக போடி நாயக்கனூரில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்திருக்கிறேன். நான் போடி சட்டப்பேரவைத் தொகுதியில் 2011 ஆம் ஆண்டு முதல் முதலாக போட்டியிட்டேன். அப்போது பெரும்வாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற போடி மக்கள் அமோக ஆதரவு அளித்தார்கள்.

நான் அளித்த அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் சிறப்பாக நிறைவேற்றி இருக்கிறேன் என்பதை போடி மக்கள் நன்கு அறிவார்கள். எனது முழு கடமையை தொகுதி மக்களுக்கு ஆற்றிருக்கிறேன். அந்த நம்பிக்கை அடிப்படையில் இரண்டு முறை என்னை வெற்றி பெற செய்த தொகுதி மக்களுக்கு சேவை புரிவதே ஒரே இலக்காக கொண்டு மீண்டும் போட்டியிடுகிறேன். மக்கள் எனக்கு அமோக ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன். தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக மகத்தான வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT