தமிழகம்

சில காலம் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தேன்: சைதை துரைசாமி 

செய்திப்பிரிவு

சில காலம் தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்ததாக சைதாப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அதிமுக முக்கிய தலைவராக இருந்த சைதை துரைசாமி, சில காலமாக அரசியலிலிருந்து ஒதுங்கி இருந்தார். இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பாக சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் சைதை துரைசாமி பேசும்” அரசியலில் அதிமுகவில்தான் இருக்கிறேன். சில காலம் தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கி இருந்தேன். ஆனால் மக்கள் சேவையில் தொடர்ந்து இருந்தேன். மக்களுக்கும் தொண்டர்களுக்கும் உதவி செய்து கொண்டுதான் வந்தேன்.

இத்தேர்தலில் நான் நிற்க வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் அன்போடு கேட்டுக் கொண்டார்கள். அதன் அடிப்படையின் கட்சி பொறுப்பாளர்கள் என் பெயரை பரிந்துரைந்தார்கள். அவர்களது அன்புக்கு கட்டுப்பட்டு நான் சம்மதித்தேன். சைதாப்பேட்டை மக்களுடன் நான் 50 ஆண்டுக்கால உறவில் உள்ளேன்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் சைதாப்பேட்டை தொகுதி தி.மு.க வேட்பளாராக மா. சுப்பிரமண்யம் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

SCROLL FOR NEXT