தமிழகம்

55 வயதுக்கு மேற்பட்ட காவலருக்கு தேர்தலின்போது எளிதான பணி: டிஜிபி திரிபாதி அறிவுரை

செய்திப்பிரிவு

உடல் நலத்தை கருத்தில் கொண்டு தேர்தல் பணியின்போது 55 வயதுக்கு மேற்பட்ட போலீஸாருக்கு எளிதான பணிகளை வழங்க போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டப் பேரவை தேர்தல்அடுத்த மாதம் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கானஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணி மற்றும் கண்காணிப்பு பணிகளில் போலீஸார்ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் இணைந்து துணை ராணுவத்தினரும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் அவசர தேவை தவிர்த்துபோலீஸார் எவருக்கும் விடுமுறை அளிக்க வேண்டாம் என தமிழகதலைமை டிஜிபியான சட்டம் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதிஅனைத்து காவல் ஆணையர்கள்,ஐஜிக்கள், டிஐஜிக்களுக்கு கடந்த 9-ம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், மற்றொரு அறிவுரை ஒன்றை போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார். அதன்படி, 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய போலீஸாருக்கு தேர்தல் பணிகளின்போது எளிதான பணிகளை வழங்க வேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது கரோனா தொற்று சில இடங்களில் உயர்ந்திருப்பதும் மற்றும் உடல் நலனைக் கருத்தில்கொண்டும் இதுபோல் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது கரோனா தொற்று சில இடங்களில் உயர்ந்திருப்பதும் மற்றும் உடல் நலனைக் கருத்தில்கொண்டும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT