கோப்புப்படம் 
தமிழகம்

புதுவையில் தேர்தலையொட்டி 5 நாட்களுக்கு மதுக்கடைகள் அடைப்பு

செய்திப்பிரிவு

சட்டமன்றத் தேர்தலையொட்டி புதுச்சேரியில் வாக்குப் பதிவையொட்டி 3 நாட்களும், வாக்கு எண்ணிக்கையின் போது இரு நாட்களும் மதுக் கடைகள் அடைக்கப்பட்டிருக்கும்.

இதுதொடர்பாக புதுச்சேரி ஆளுநர் தமிழிசை வெளியிட்டிருக்கும் உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் என மொத்தம் 1,54,847 பேருக்கு ஓய்வூதியம் வழங்க ரூ.29.65 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மாஹே மற்றும் ஏனாமில் உள்ள அங்கன்வாடிகளுக்கு தேவையான சாதனங்கள்வாங்க ரூ.24.35 லட்சத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட் டுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவையொட்டி ஏப்ரல் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரையிலும், வாக்கு எண்ணிக்கையொட்டி மே 2-ம் தேதி முதல் மே 3-ம் தேதி மாலை 4 மணி வரையிலும் மதுக் கடைகள், கள்ளுக் கடைகள், சாராயக் கடைகள், மது விற்பனையுடன் கூடி ரெஸ்ட்டாரண்ட் ஆகியவை மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT