தமிழகம்

முன்கூட்டியே பிரச்சாரம் செய்த தொகுதிகளும் இல்லை: 23 மாவட்டங்களில் போட்டியிடாத பாஜக

செய்திப்பிரிவு

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை. இந்தத் தொகுதி எங்களுக்குத்தான் என முன்கூட்டியே பிரச்சாரம் செய்த தொகுதிகளும் பாஜகவுக்கு ஒதுக் கப்படவில்லை

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அக்கட்சி போட்டியிடும் தொகுதிகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 15 மாவட்டங்களில் மட்டுமே பாஜகவுக்கு தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 தொகுதிகள், சென்னை, விழுப்புரத்தில் தலா 2 தொகுதி கள், திருவண்ணாமலை, ராம நாதபுரம், ஈரோடு, கோவை, விருதுநகர், கரூர், தஞ்சை, நீலகிரி, நெல்லை, கிருஷ்ணகிரி, சிவகங்கை, திருப்பூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 23 மாவட்டங்களில் பாஜக வுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட வில்லை. அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்தபோதே தமிழகத்தில் பல தொகுதிகளில் பாஜகவினர் தங்களுக்குத்தான் ஒதுக்கப்படும் எனக் கருதி பிரச்சாரம் செய்து வந்தனர்.

சேப்பாக்கம்-திருவல்லிக் கேணி தொகுதியில் நடிகை குஷ்பு, மதுரை தெற்கு தொகுதியில் பாஜக மாநில துணைத் தலை வர் ஏ.ஆர்.மகாலெட்சுமி, ராஜ பாளையம் தொகுதியில் நடிகை கவுதமி ஆகியோர் தீவிர பிரச் சாரம் செய்தனர். மதுரை தெற்கு தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், கட்சியின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த தொகுதிகளில் எதுவும் பாஜகவுக்கு ஒதுக்கப் படாததால் அக்கட்சியினர் ஏமாற் றம் அடைந்துள்ளனர்.

மதுரை கிழக்கு, தாமரையின் இலக்கு என்ற பெயரில் கடந்த 2 ஆண்டுகளாக மாநகர் மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரன் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இந்த தொகுதியில் அதிமுக சார்பில் கோபாலகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள் ளார். மதுரை மாவட்டத்தில் மதுரை வடக்குத் தொகுதி பாஜக வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு பாஜக மாநில பொதுச் செயலர் னிவாசன் போட்டியிட வாய்ப்பு உள்ளது. தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பாஜகவுக்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை. எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக் காததால் பாஜகவினர் விரக்தியில் உள்ளனர்.

SCROLL FOR NEXT