பாமக ஆட்சிக்கு வந்தால் ஜெயங்கொண்டம் அனல்மின் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாமக அரியலூர் - பெரம்பலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், ராமதாஸ் பேசும்போது, “பாமக ஆட்சிக்கு வந்தால் ஜெயங்கொண்டம் அனல்மின் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும், இப்பகுதியின் மீத்தேன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும்” என்றார்.
பின்னர், அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசை எதிர்பார்க்காது, தமிழக அரசே அவற்றை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். விளைநிலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம், கறவைமாடு இழந்தோருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமாக அளிக்க வேண்டும். ” என்றார்.