விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக 5 தொகுதிகளிலும் பாஜக ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன. இம்முறை சிவகாசியிலிருந்து மாறி ராஜபாளையம் தொகுதியில் போட்டி யிடுகிறார் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி.
மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 தொகுதிகளில் ராஜபாளையத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, சாத்தூரில் கிழக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், சிவகாசியில் லட்சுமி கணேசன், அருப்புக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், வில்லிபுத்தூரில் மான் ராஜ் போட்டியிடுகின்றனர். விருதுநகர் கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011 மற்றும் 2016-ம் ஆண்டு தேர்தல்களில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கே.டி.ராஜேந்திரபாலாஜி அமைச்சராக இருந்தார். இந்நிலையில், சிவகாசி தொகுதியில் அவரது செல்வாக்கு சரியத் தொடங்கியது.
அதோடு ராஜபாளையத்தில் போட் டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார். ஆனால் அங்கு பாஜகவினர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில் தற்போது ராஜபாளையத்தில் களமி றங்கியுள்ளார். இதனால் கடந்த இரு மாதங்களாக ராஜபாளையத்தில் தங்கி பிரச்சாரம் செய்த நடிகை கவுதமியின் கனவு பொய்த்தது.
அதோடு விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதி வேட்பாளர் குறித்து அதிமுக இதுவரை அறிவிக்கவில்லை. சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் பெயரும் பட்டியலில் இல்லாததால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள் ளனர்.