தமிழகம்

மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகள் அறிவிப்பு: அத்தனையிலும் அதிமுகவுடன் நேரடி சவால்

செய்திப்பிரிவு

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தொகுதிகள் ஒதுக்கீடு ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தானது.

திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அதன்படி, மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர் (தனி), சாத்தூர், அரியலூர், பல்லடம், மதுராந்தகம் (தனி) ஆகிய 6 தொகுதிகள் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுக 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.

மேலும், இந்த 6 தொகுதிகளிலும், மதிமுக அதிமுக வேட்பாளர்களுடன் நேரடியாக களம் காண்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக சார்பில், சாத்தூரில்- ரவிச்சந்திரன், பல்லடத்தில்- எம்.எஸ்.எம். ஆனந்தன், வாசுதேவநல்லூரில்- மனோகரன், மதுராந்தகத்தில் - மரகதம் குமாரவேல் மதுரை தெற்கு தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ- எஸ்.எஸ். சரவணன், அரியலூரில், தாமரை ராஜேந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்.

6 தொகுதிகளிலும் அதிமுகவுடன் நேரடியாகக் மோதுவதால், வேட்பாளர்களை அதிக மெனக்கிடலுடன் தேர்வு செய்து கட்சித் தலைமை விரைவில் அறிவிக்கும் என மதிமுக வட்டாரம் தெரிவிகின்றது.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் பலவும் திமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாகக் கூறுவதால், திமுகவினரும் கூட்டணிக் கட்சியினரும் உற்சாகமாகக் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT