தமிழகம்

நல்லவர்களையும் வல்லவர்களையும் நம்மவர் வரவேற்பார்: சரத்குமார் பேட்டி

செய்திப்பிரிவு

நாங்கள்தான் முதல் கூட்டணி என்றும் நல்லவர்களையும் வல்லவர்களையும் நம்மவர் வரவேற்பார் எனவும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் இன்று கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது சரத்குமார் கூறும்போது, ''மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக மீண்டும் கமல்ஹாசனையே முன்மொழிகிறோம். மக்களுக்கு மாற்றம் வேண்டும், மாற்றம் வேண்டும் என்று சொல்லும்போது, அந்த மாற்றத்துக்கான சக்திகள் ஒன்றிணைய வேண்டும். அதற்குத்தான் நாங்கள் ஒன்று சேர்ந்திருக்கிறோம். நாங்கள் எதிர்பார்க்கும் மாற்றம் வரும் என்று நம்புகிறோம். இது முதல் கூட்டணி. பத்திரிகையாளர்கள் முதல் கூட்டணி என்றுதான் எங்களை அழைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

சிறப்பாகச் செயல்படுவோம். தொடர்ந்து ஒன்றாகப் பயணிப்போம். நல்லவர்களையும் வல்லவர்களையும் நம்மவர் வரவேற்பார்'' என்று தெரிவித்தார்.

மேலும் ராதிகா சரத்குமார் கூறும்போது, ''இது முதல் கூட்டணி. விஸ்வரூபம் பெற்ற கூட்டணி. இந்தக் கூட்டணி மாற்றத்துக்காகவும் மக்களின் முன்னேற்றத்துக்காகவும் கூட்டணி. எல்லோரும் இணைந்து சிறப்பாகச் செயல்பட வந்திருக்கிறோம். இது கண்டிப்பாக வெற்றிக் கூட்டணியாகத் தொடரும்'' என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT