தமிழகம்

‘சி விஜில்’ செயலியில் தமிழிலும் புகார் அளிக்கும் வசதி: விரைவில் அறிமுகப்படுத்துகிறது தேர்தல் துறை

செய்திப்பிரிவு

தேர்தல் தொடர்பான புகார்களை அளிப்பதற்கான ‘சி விஜில்’ செயலியில் தமிழில் புகாரை பதிவு செய்யும்வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.

சட்டப்பேரவை தேர்தல் நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமைதேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூநேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:

அரசியல் கட்சிகள் வெளியிடும் அறிவிப்புகள் தொடர்பாக தேர்தல்ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

அரசியல் கட்சிகள் வெளியிடும் அறிவிப்புகள் தொடர்பாக புகார் ஏதேனும் வந்தால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.

தமிழக தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எந்த வருடத்தில் தயாரிக்கப்பட்டவை?

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் எம்-3 அதாவது தற்போதைய தயாரிப்புகள்தான். அதேபோல், 2017-ம் ஆண்டுமுதல் உள்ள ‘விவிபேட்’ இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பணம் பறிமுதல் விவகாரத்தில் வியாபாரிகள் மற்றும் தனது மகன்அல்லது மகளின் திருமணத்தை நடத்தும் பெற்றோர் பாதிக்கப்படுகின்றனரே?

ரூ.50 ஆயிரம் வரை பணத்தைஎடுத்துச் செல்ல அனுமதியுண்டு. அதற்கு மேல் எடுத்துச் சென்றால்அந்த பணம் எங்கிருந்து எடுக்கப்பட்டது, எதற்காக செலவழிக்கப்படுகிறது என்பதற்கான ஆவணங்கள் வேண்டும். அதேபோல், தங்கநகைகளைக் கொண்டு செல்வோர்,வங்கி ஏடிஎம்-க்கு பணம் கொண்டுசெல்வோர் உரிய ஆவணங்களைவைத்திருக்க வேண்டும். அனைத்துவிதமான சந்தேகத்துக்குரிய ஆன்லைன் பணப்பரிமாற்றங்கள் கண்காணிக்கப்படுகின்றன. பணப்பட்டுவாடா உள்ளிட்டவை கடுமையாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

‘சி விஜில்’ கைபேசி செயலியில் தற்போது ஆங்கிலம், இந்தியில் மட்டுமே விவரங்கள் உள்ளன. இதில் தமிழில் புகார் பதிவு செய் யும் வசதி ஏற்படுத்தப்படுமா?

ஒருசில தினங்களில் ‘சி விஜில்’ செயலியில் தமிழிலும் புகார் பதிவுசெய்யலாம். அதற்கான நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT