தமிழகம்

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் தஞ்சாவூர் வருகை ரத்து

செய்திப்பிரிவு

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் தஞ்சாவூர் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள மாநகராட்சித் திடலில் நாளை (மார்ச் 10) பாஜக பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும், இதில் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி நட்டா பங்கேற்று சிறப்புரையாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், “ஜே.பி.நட்டாவின் தஞ்சாவூர் வருகை பல்வேறு காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது. மற்றொரு தேதியில் பிரதமர் மோடியின் வருகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுதொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும்” என பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு எம்.முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT