கோவை விமானநிலையம் அருகேஅவிநாசி சாலையில் செயல்பட்டு வரும் ‘பாஸ்போர்ட் சேவா கேந்திரா’-வில் டி.சி.எஸ். நிறுவனம் மூலம் சேவைகள் வழங்கப்படுகின்றன. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, பாஸ்போர்ட்சேவா கேந்திரா அலுவலகத்தில் நேற்று ஆண் பணியாளர்கள் அனுமதிக்கப்படாமல், பாஸ்போர்ட் சேவைகள், அலுவலக பராமரிப்பு, பாதுகாப்பு என அனைத்து பணிகளும் பெண்களால் மேற்கொள்ளப்பட்டன.
பாஸ்போர்ட் சேவாகேந்திரா பொறுப்பு அதிகாரி கவிதா குமாரி, டிசிஎஸ் குடிமக் கள் சேவை பிரிவு அதிகாரி உமாமுரளி தலைமையில் பணிகள் நடைபெற்றன. இதில் பாஸ்போர்ட் சேவா கேந்திரா தரப்பில் 14 பேரும், டிசிஎஸ் நிறுவனத்தின் தரப்பில் 16 பேரும் பணியாற்றினர்.
மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பால் ரவீந்திரன் பெண்களால் வழங்கப்படும் சேவைகளை நேற்று மாலை பார்வையிட்டு, அனை வருக்கும் பாராட்டு தெரிவித்தார். நிறைவாக கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.