ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரியத்துக்கு புதிதாக உபதலைவர் மற்றும் புதிய அலுவல் சாரா உறுப்பினர்களை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக சட்டப் பேரவை தேர்தல் அறிவிப்புக்கு முன்கடந்த மாதம் 25-ம் தேதிஇந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசு முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் வெளியிட்ட அரசாணை விவரம்:
தூய்மை பணிபுரிவோருக்கு கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கென அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களின் செயலாக்கத்தை கண்காணித்து, அவற்றின் முன்னேற்றத்தை உறுதிசெய்ய, அலுவலர் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களைக் கொண்டு தூய்மை பணிபுரிவோர் நலவாரியம் அமைத்து ஆணை வெளியிடப்பட்டது.
தூய்மை பணி ஆற்றுவோரின் நலன்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு அமைக்கப்பட்ட தூய்மை பணியாளர் நலவாரியத்துக்கு புதிதாக உபதலைவர் மற்றும் புதிய அலுவலர் சாரா உறுப்பினர்களை நியமிக்க அரசு உத்தேசித்து ஆணையிடுகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரை தலைவராகவும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கோவிந்தராஜை உபதலைவராகவும், அலுவல் சார்ந்த மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களை கொண்டும் தூய்மை பணியாளர் நலவாரியம் செயல்படும்.
அலுவல் சார்ந்த உறுப்பினர்கள்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, நிதித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கல்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை, பள்ளிக் கல்வித்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறைகளின் செயலர்கள், ஆதிதிராவிடர் நலம், பழங்குடியினர் நலம், பேரூராட்சிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகளின் இயக்குநர்கள், நகராட்சி நிர்வாக ஆணையர், தாட்கோ மேலாண்மை இயக்குநர்.
அலுவல் சாரா உறுப்பினர்கள்
எஸ். ஆனந்தன் (திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம்), கொ.வரதராஜன் (சேலம்), எஸ்.டி. கல்யாணசுந்தரம் (மதுரை), ஆர். சாமிநாதன் (கரூர்), எம். காமராஜ்( லாலாபேட்டை, கரூர் மாவட்டம்), என்.டி.ஆர். நடராஜ் (திருப்பூர்), செல்வகுமார் (கோவை), இஸ்ரேல்(சென்னை), வி. ராமச்சந்திரன் (மதுரை), உக்கடம் நாகேந்திரன்(கோவை), நந்தகோபால் (குனியமுத்தூர், கோவை), ஏ.பாலசுப்பிரமணியம் (திண்டுக்கல் மாவட்டம்), கோ. ராஜமாணிக்கம் (ராமநாதபுரம் மாவட்டம்), யுவராஜ்என்ற அருண் (கோவை).
தூய்மை பணியாளர் நலவாரியமானது ஒரு முதல்நிலை குழுவாக செயல்படும். இந்த வாரியத்தின் உபதலைவர் மற்றும் அலுவல் சாரா உறுப் பினர்களின் பதவி காலம் 3 ஆண்டுகள். வாரியத்தின் உறுப் பினர் செயலராக தாட்கோ மேலாண்மை இயக்குநரே தொடர்ந்து செயல்படுவார். இவ் வாறு அரசாணையில் தெரி விக்கப்பட்டுள்ளது.