தமிழகம்

சுரங்க கழிவுகளால் விளைநிலங்கள் பாதிப்பு

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இருந்து வெள்ளநீரில் அடித்து வரப்பட்ட சுரங்கக் கழிவுகளால் விளைநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

என்எல்சி 2-ம் சுரங்கம் உள்ளிட்ட பகுதியில் பெய்த பெருமழை மேல்பரவனாற்றில் புகுந்து பெருக் கெடுத்துஓடியது. சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் ஆற்றின் தெற்கு கரையில் பலவீனமான பகுதியில் பெரும் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீரும், என்எல்சி யின் 2-ம் சுரங்கத்தின் நிலக்கரி கழிவுகளும், சகதிகளும் விளைநிலங்களில் பரவியது.

கரைஉடைப்பு குறித்து மேல கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்த மார்டீன் கூறும்போது, “சம்பா சாகுபடி செய்து விரைவில் அறுவடைக்கு தயாராக இருந்தது.

இதுவரை பயிர்கள் மட்டுமே சேதம் அடையும். ஆனால் இந்த முறை பயிர் அழிந்ததோடு சுரங்க கழிவுகள் நிலத்தில் படிந்ததால் நிலத்தின் தன்மையே மாறிவிட்டது. இனி இதில் பயிர் செய்ய முடியாத நிலையுள்ளது. எந்த பயிரும் விளையாது. எனவே, என்எல்சி இந்நிலங்களை பயிர் செய்யத்தக்க வகையில் செப்பனிட்டு தர வேண்டும். தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT