ஜிஎஸ்எல்வி - எஃப்10 ராக்கெட் மூலம் ஜிஐசாட்-1 செயற்கைக் கோள் இம்மாத இறுதியில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
புவி கண்காணிப்பு, பேரிடர் மீட்பு பணிகளுக்காக ஜிஐசாட்-1 என்ற அதிநவீன ‘ஜியோ இமேஜிங்’ செயற்கைக் கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்தது. இதை ஹரிகோட்டாவில் இருந்துஜிஎஸ்எல்வி - எஃப்10 ராக்கெட்மூலம் கடந்த 2020 மார்ச் 5-ம் தேதிவிண்ணில் செலுத்த இஸ்ரோதிட்டமிட்டது. தொழில்நுட்பக் காரணங்களால் ராக்கெட் பயணம்நிறுத்தப்பட்டு, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், ஜிஐசாட்-1 செயற்கைக் கோளை ஜிஎஸ்எல்வி - எஃப்10 ராக்கெட் மூலம் இம்மாத இறுதியில் விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். செயற்கைக் கோள் வடிவமைப்பு, செயல்பாடுகளில் சில தொழில்நுட்ப அம்சங்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது.
2,268 கிலோ எடை கொண்டது ஜிஐசாட்-1. இதில் உள்ள 5 விதமான 3டி கேமராக்கள், தொலைநோக்கி மூலம் புவிப் பரப்பை துல்லியமாக பார்க்கவும், படம் எடுக்கவும் முடியும்.