வடக்குத்து ஊராட்சியில் புதிய டாஸ்மாக் கடையை திறந்தால் தேர்தலை புறக்கணிக்கப் போவ தாக நெய்வேலி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் நேற்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
வடக்குத்து ஊராட்சி கீழுர் செல்லும் சாலையில் கடந்த மாதம்27-ம் தேதி புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து கடை திறக்கும் முயற்சி உடனடியாக கைவிடப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் அப்பகு தியில் டாஸ்மாக் கடையை திறக்கும் முயற்சி நடப்பதாக அப் பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அப்பகுதிமக்கள் எனது தலைமையில் ஒன்றுகூடி அவசர ஆலோசனை மேற் கொண்டனர். அதில் அப்பகுதியில் மீண்டும் கடை திறக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால், வரும் சட்டமன்ற தேர்தலை புறக் கணிக்கப் போவதாக முடிவு செய்யப்பட் டுள்ளது.
அன்றைய தினமே, ரேஷன் கார்டு, வாக்காளர் அடை யாள அட்டை ஆகியவற்றை குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவல கத்தில் ஒப்படைப்பது எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே டாஸ்மாக் கடை திறப்பதை நிறுத்தவேண்டும் என்று நெய்வேலி சட்ட மன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கீழுர் ஒன்றிய கவுன்சிலர் கஸ்தூரி செல்வக்குமார் மனு அளித்துள்ளார்.
மீண்டும் கடை திறக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால், வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.